Wednesday, February 23, 2011

ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில்

படம்: சுதை வடிவில் பழைய மூலவர்   








படம்:ஸ்ரீ காளியம்மன்










படம்: ராஜகோபுரம்


ஸ்ரீ காளியம்மன் கோயில்


நமது நாட்டில் அம்மனுக்கு என்று பல கோவில்கள் உன்டு. நமது தேசமே தாய் தேசம் தானே. அப்படிப்பட்ட பல சக்தி தளங்களுக்குள் ஒன்றுதான் நாச்சியார்புரம் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில். இது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா நாச்சியார்புரம் கிராமத்திலுள்ளது.

சிறப்பம்சம்

தேனி மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய ராஜ கோபுரம் கொண்ட அம்மன் கோவில். கருவறையில் மிகப்பெரிய கற்சிலையில் மூலவர் ஆக கையில் சூலம் தாங்கி அசுர வத கோலத்துடன் சாந்த சொரூபினியாக ஸ்ரீ காளியம்மன் வீற்றிருக்கிரார். அர்த்த மண்டபத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இரு துவாரபாலகிகள் நம்மை வரவேற்ப்பது போல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள் அருகில் சுதை வடிவில் காமட்சியம்மனும், மஹா மண்டபத்தில் பலங்கால சுதை வடிவ மூலவரான காளியம்மன் புதுப்பிக்கப்பட்டு அமர்த்தப்பட்டு உள்ளது. மேலும் வினாயகர், பாலமுருகன் சிலைகளும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவிழா

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 20 ஆம் தேதிக்குப்பிறகு வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அம்மனுக்கு திருவிழா நடத்தப்படுகிறது. அதுசமயம் சுற்று வட்டார பகுதி மக்கள் அணைவரும் வேலை, தொழில் காரணமாக வெளியூரில் இருப்பவர்களும் அன்றைய தினம் ஊருக்கு வந்துவிடுகிறார்கள்.

அம்மனுக்கு நேர்த்திக்கடனாக மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், ஆடு, கோழி பலி கொடுத்தல், கரகம், முளைப்பாரி(7 நாட்களில் சூரிய ஒளி படாமல் பயறு செடி சுமார் இரண்டு அடி வளரும்) எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், முதலிய வைபவங்கள் நடைபெறும். சிறப்புஅம்சமாக குழந்தைகளுக்கு நேர்த்திக்கடனாக கவுறு குத்து என்ற நிகழ்ச்சி நடைபெறுவது வேறு எங்கும் கானமுடியாததாகும்.

அமைவிடம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து ஜம்புலிபுத்தூர் வழியாக ரெங்கசமுத்திரம் வந்து நாச்சியார்புரம் செல்லலாம்.(3KM). தேனி To ஆண்டிபட்டி சாலையில் ரெங்கநாதபுரம் வழியாக நாச்சியார்புரம் செல்லலாம்.(12KM).பெரியகுளத்திலிருந்து வைகை அணை வழியாக நாச்சியார்புரம் செல்லலாம்(12KM) நாமும் ஒரு முறை சென்று தரிசிப்போமா..........
வணக்கத்துடன் ....S .நாகராஜன்

Thursday, February 3, 2011

வெள்ளியங்கிரி யாத்திரை



படம்: கைதட்டி சுனை

வெள்ளிங்கிரி
வெள்ளியங்கிரி தல வரலாறு

பொது தகவல்:

சிவபெருமான் குடிகொண்டிருக்கும் கைலாயம் மூன்று. வடகைலை என்பது வட துருவத்தில் கடலில் அமைந்துள்ளது. மத்திய கைலை என்பது இமயமலையில் உளளது. தென் கைலை என்பது தமிழகத்தில் கோவை நகரிலிருந்து சுமார் 30 கி. மீ. தொலைவிலுள்ள வெள்ளிங்கிரி, வெள்ளிமலை, தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரியில் அமைந்துள்ளது. இதில் வட கைலைக்கு செல்லவே முடியாது என்பர். மத்திய கைலை அனைத்து மக்களும் சென்று தரிசனம் செய்வது என்பது சிரமமானது. இந்த குறையை போக்கும் வகையில்தான் வெள்ளியங்கிரி கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று ஈசனை தரிசித்தால் இமயமலையில் உள்ள கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கிறது. ஒரு முறை வெள்ளியங்கிரி மலை ஏறிவந்தால் ஆண்டு முழுவதும் உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது. மலை முழுவதும் மூலிகைகள் இருப்பதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை கிடைக்கிறது. தமிழ், தெலுங்கு வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, கார்த்திகை ஆகிய நாட்களில் மலைமீது உள்ள சுவாமிகிரியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். ஆனால் மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை ஆண்டு முழுவதும், அனைவரும் சென்று தரிசிக்கலாம்.

தலபெருமை:

இத்தலத்தில் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் காசியில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். இந்த மலைக்கும், ராமாயண, மகாபாரத சம்பவங்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பர். இங்கு ஏழு மலைகள் உண்டு. இதில் ஐந்தாவது மலையில்தான் சீதை தவமிருந்து சிவனிடம் வரம்பெற்றதாக கூறப்படுகிறது. அதேபோல் அர்ச்சுணன் பாசுபதம் பெற வேண்டி இறைவனை நோக்கி தவம் இருக்கும்போது இறைவன் வேடன் உருவில் வந்து, அர்ச்சுணனுடன் சண்டையிட்டு முடிவில் பாசுபதம் வழங்கிய தலம் வெள்ளியங்கிரி என புராணங்கள் கூறுகின்றனர். இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையில் 6,000 அடி உயரம்கொண்டதாக அமைந்துள்ளது. கோவைக்கு குடிநீர் வங்கும் சிறுவாணி அமையும், நொய்யல் ஆற்றின் பிறப்பிடமும் இங்குதான் உள்ளது. இங்கு முதல் மலையிலிருந்து ஏழாவது மலை வரை 5.5 கி.மீ. தூரமும் அடர்ந்த காடாக இருக்கிறது. எனவே பங்குனி, சித்திரை மாதங்களில்தான் பக்தர்கள் அதிகமாக வந்து செல்கிறார்கள். இம்மலையில் அடிவாரம் முதல் ஆண்டி சுனை வரை அமைந்துள்ள ஆறு மலைகளும் மனித உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்ற ஆறு ஆதாரங்களை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. இந்த ஆறு மலைகளையும் கடந்து ஏழாவது மலையான சிவன் இருக்கும் மலையே "ஞானியர் காண்கின்ற சிவஜோதி நடன மலை' என கூறப்படுகிறது. உள்ளம், உடல் உறுதி உள்ளவர்கள் மடம்டுமே இந்த புனித பயணத்தை மேற்கொள்ள முடியும். முதல் மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பூஜைகள் சிறப்பாக நடக்கும். மலை ஏற முடியாதவர்களும் 14 முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் மலை அடிவாரத்தில் உள்ள கோயிலை தரிசித்து செல்கின்றனர். மலை ஏற ஆரம்பிக்கும் போது அடிவாரத்தில் கோவில் நிர்வாகத்தாரால் ஒரு மூங்கில் தடி வழங்கப்படுகிறது அதை நாம் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவேண்டும் மூங்கில் தடி இல்லாமல் கண்டிப்பாக மலை ஏற முடியாது .( மலையை விட்டு இறங்கி நாம் நமது வீட்டுக்கு மூங்கில் தடியை கொண்டு சென்று அதை பூஜை அறை ல் வைத்து இறை ரூபமாக வழிபடலாம் ).இந்த தடிக்கும் ஒரு புராணகதை உண்டு.

இம்மலையில் முதல் மலையும், ஏழாவது மலையும்தான் ஏறுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இரண்டாவது மலை ஏறினால் கைதட்டி சுனை உள்ளது.


படம்: அடிவாரம் கோவில்
மூன்றாவது மலை ஏறி இறங்கினால் தாகம் தீர்க்க பாம்பாட்டி சுனை உள்ளது. நான்காவது மலை தாண்டி ஐந்தாவது மலையை அடைந்தால் அங்குள்ள மண் திருநீறாய் இருக்கிறது. பக்தர்கள் தங்களுக்கு தேவையான திருநீறு பிரசாதத்தை இங்கிருந்துதான் எடுக்கிறார்கள். அதனால் இம்மலை "திருநீறு மலை' என அழைக்கப்படுகிறது. இதை தாண்டி ஆறாவதுமலை சென்றால் தென் கைலாயத்தின் மானசரோவரான ஆண்டி சுனை உள்ளது. ஆண்டி சுனை எந்த காலத்திலும் பனிக்கட்டியை போட்டு நிறப்பியதுபோல் உடல் விறைத்து போகுமளவுக்கு ஜில் என்றிருக்கும். இந்த சுனையில் நீராடிவிட்டுத்தான் ஏழாவது மலையில் உள்ள ஆண்டவனை தரிசிக்க செல்லவேண்டும்.

ஏழாவது மலையான சுவாமிகிரி பார்க்கும்போது எளிதாக தோன்றும். ஆனால் அருகில் சென்றால் மலை மிகவும் செங்குத்தாக இருக்கும். இந்த மலையில் இயற்கையாகவே துவார பாலகர்கள் போன்ற இரு பாறைகள் சன்னதியின் முன்பு அமைந்துள்ளது.

இங்கு ஆறடி அகலமுள்ள சிறிய குகையில் சிவன் பஞ்ச லிங்கங்களாக, சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இப்போதும் இங்கு பல சித்தர்கள் நமது கண்களுக்கு தெரியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.